பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 திருக்குறள் உழுது பயிரிடுகிறதில்லாவிட்டால் உலகத்திலே இம்மை மறுமை வீடு என்கிறதில்லையென்பது ஆர் 1037. தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்பது ஒரு நிலத்தை யுழுகிறவன் ஒரு பலப்"புழுதிமண் கஃசாகத்தக்க தாகக் காயவிட்டால்”, அதிலே யிடுகிற பயிருக்கு ஒரு பிடி எருவும் போடாமல் தானே நன்றாய்ப் பணைத்து விளையு மென்றவாறு. «GT 1038. ஏரினு நன்றா லெருவிடுதல் கட்ட"பின் நீரினு நன்றதன் காப்பு என்பது பயிருக்கு உழுகிறதும் எருப் போடுகிறதும் நல்லது; உழுது எருப் போட்டுப் பயிரிட்ட பிறகு, களை பறித்து வேலி கட்டிக் காக்கிறது" தண்ணிர் நிறைக்கிறத்திலும் நல்லதென்றவாறு. பயிரிடுகிறவனுக்கு உழுதல் எருப்போடுதல் களைபறித்தல் தண்ணிர்கட்டல் மாடுமேயாமற் காத்தல் என்று சொல்லப்பட்ட ஐந்து வகையுஞ் செய்ய வேணுமென்பது. ٹے({ 1039. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் தில்லாளி னுடி விடும் என்பது அந்த நிலத்தை யுடையவன் நாள் தோறும் போய்ப் பார்த்து அந்தப் பயிருக்குச் செய்ய வேண்டினது செய்யாமல் மடிந்திருந்தால், அந்தப் பயிர் அவன் பெண் சாதியைப் போலே தன்னிலே வெறுத்துக் கொண்டு அவள் அவனுடனே பிணங்கிப் போ மென்றவாறு. 1. என்கிற பயன்கள் நிகழா - அச்சநூல் 2. அந்த: ச. 5ГТ Шгг விட்டால், 4. நட்ட ச. கார்கிறது - காகிதச்சுவடி. ச. நிறைக்கிற ஒதும் 7. தன்னுள்ளே - அச்சுநூல்