பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 28 திருக்குறள் மில்லையா மென்றவாறு. இம்மையின்பமாவது, வேண்டிய வஸ்த்துக்களை யனுபவித்த லாம். மறுமைப் பயனாவது தான தர்மங்களைப் பண்ணுதலாம். o_ 1043. தொல்வரவும் தோலுங் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னு நசை என்பது ஒருவனுக்குத் தரித்திர மென்று சொல்லப்பட்ட குற்றம், தன் வங்கிசத்தார் நடந்த நல்ல நடக்கையையும் அதற்கேற்ற நல்ல வசனங்களையும் கெடுக்கு மென்றவாறு. தரித்திரம் வந்தால் இழி தொழில்களையும் இழிவான வசனங்களையும் செய்வர் என்றவாறு'. MHL 1044. இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் என்பது பொல்லாத வசனங்களைச் சொல்லாத நல்ல குடியிலே பிறந் தவர்களுக்குத் தரித்திரம் வந்தால், அது பொல்லாத வசனங் களைச் சொல்லத் தக்கதாய் நல்ல குணங்களை மறப்பிக்கு மென்றவாறு. தரித்திரம் வந்தால் நல்ல குணங்களை மறந்து விடுவரென்ப தாம். ச 1045. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் என்பது தரித்திர மென்னப்பட்ட துன்பத்திலே பல துன்பங்களும் வந்து விளையு மென்றவாறு. hi 1. இச்சிறப்புரை அச்சுநூலில் இல்லை