பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

திருக்குறள்

நூல் நிலையத்தில் 880 பக்கங்கள் கொண்ட 1940 என்ற எண் உடைய சுவடியாகவுள்ளது. இது தஞ்சைக்கருகிலுள்ள கருந்தட்டான் குடி, கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக விருந்த திரு. அடிகளாசிரியருக்குச் சொந்தமான ஒலைச் சுவடியைப் பார்த்துப்படியெடுக்கப்பட்டது. படியெடுத்து முடித்தது 12-4-1968. இதன் மூல ஓலைச் சுவடி திரு அடிகளாசிரியர்க்கே திருப்பியளிக்கப் பட்டு விட்டது. ஒப்பீடு செய்ய அந்த ஒலைச் சுவடியைக் கேட்ட பொழுது அது தம்மிடம் இல்லை யென்றும் யாரிடம் கொடுக்கப் பட்டது என்ற செய்தி நினைவில் இல்லையென்றும் அவர் கூறினார்.

இந்தக் காகிதக் கையெழுத்துச் சுவடியை 19-2-1968 முதல் 20-4-68 வரை சரசுவதி மகால் தமிழ்ப்பண்டிதர் திரு.வி. சொக்கலிங்கம் அவர்கள் மூலச்சுவடியுடன் ஒப்பீடு செய்து பல இடங்களில் உரை மாற்றம் செய்துள்ளார். மாற்றம் செய்தவை எச் சுவடியை நோக்கிச் செய்யப்பட்டவை என்று கேட்ட பொழுது நினைவில் இல்லை என்று கூறினார். சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலுள்ள ஒலைச் சுவடியோடு நான் ஒப்பீடு செய்த பொழுது மாற்றம் செய்தன யாவும் அச் சுவடியில் இருத்தல் காணப்படலாயிற்று. எனவே அடிகளாசிரியர் சுவடியில் இருந்தவை - முதலில் படியெடுக்கப் பெற்றவையாவும் திரு அ. சக்கர வர்த்தி அவர்கள் 1949 இல் அச்சிட்டு வெளியிட்ட கவிராச பண்டிதருரைப் பிரதியோடு பெரும்பாலும் ஒன்றியிருப்பது அறியப்பட்டது.

சரசுவதி மகாலில் உள்ள கையெழுத்துச் சுவடியில் பல இடங்களில் உரை குறையாக இருத்தல் காணப்பட்டது. அக் குறைப் பகுதிகளும் பேரா. சக்கரவர்த்தி அவர்கள் வெளியிட்ட அச்சு நூல் பார்த்து நிறைவு செய்யப் பட்டன. மேலும் “தம்மிலிருந்து” என்ற 1107 ஆவது குறள் வரையில் தான் அடிகளாசிரியர் சுவடியில் இருந்தது என்றும் எஞ்சிய குறள்களுக்குரிய உரை பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் வெளியிட்ட கவிராஜ பண்டிதர் உரையுள்ள அச்சு நூலிலிருந்து நிறைவு செய்யப் பெற்றது என்றும் ஒரு குறிப்பு காகிதக் கையெழுத்துச் சுவடியில்