பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

443

இப்பால் வெண்பா:

“அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின் மூன்
றெண்பொரு ளேழா மிவை”

{குறிப்பு:- இது திருவள்ளுவ மாலைச் செய்யுள் எண் 26: போக்கியார் பாடியது: காலிங்கருரையிறுதியிலும் இச் செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது).

இனி, காமத்துப்பால்

என்பது, இனி அந்தப் பொருளைத்துணைக் காரணமாகவுடைய இன்பங்கூறுகின்றார்.

இன்பமாவது ஐம்புலன்களும் ஒரு காலத்து ஒருபொருளை நுகர்கின்ற இன்பமாம். வட நூலுக்குள்ளே போசராசன், ‘சுவை பல வென்று சொன்னான்.’[1] நான் கூறுகின்றது இன்பச்சுவை யொன்றையுமே,[2] இது புணர்ச்சி பிரிவு என இருவகைப்படும். புணர்ச்சியைக் களவென்றும், பிரிவைக் கற்பென்றும் பிரசித்தியாக[3] உலக நடையோடு ஒப்பும் ஒவ்வாமையு மாகக் கூறுகின்றார்.

களவாவது, பிணி மூப்பிறப்பில்லாமல் எந்நாளும் ஒரு சரியாய் உருவும் திருவும் பருவமும் குலமும் குணமும் அன்பும் முதலான துகளினாலே[4] சரியொத்திருக்கிற தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் கொள்வதுமன்றித் தாங்களே ஒருவர்க்கொருவர் எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது.

இதனையேழதிகாரத்தாற் கூறுவான் றொடங்கி[5] முதலிலே தகையணங்குறுத்தல் *(கூறுகின்றார்.

109. தகையணங் குறுத்தல் குறிஞ்சி

அஃதாவது நாயகன் சிங்கார வனத்திலே விளையாடப் போனவிடத்திலே)* தனியே நின்றாளொரு நாயகியைக் கண்டு,


  1. சொல்லுவார் சொல்லுக
  2. என மிகுத்துக் கூறினான் என்பது தொடர்ந்து அச்சு நூலிலுள்ளது. (பரிமேலழகருரை)
  3. வகுத்து-அச்சு நூல்
  4. முதலியவற்றால். "முதல் *வரை அச்சு நூல்
  5. நுடங்கி;