பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444

திருக்குறள்

விருப்பமாய்த் தானே வந்து பார்த்து,[1] அவளுடைய சவுந்தரியம் தன்னை வருத்துகிறதத்தை[2]ச் சொல்லுகிறது. இது கண்டவுடனே யுண்டானதாதலால் முதலிலே கூறுகின்றார்.

1081. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கணங்குழை[3]

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

என்பது

தலைமகளுருபு முதலியன முன் கண்டறியாதனவாய் மிகவும் சிறப்பாயிருந்தது கண்டு தலைமகன் சந்தேகப்படுகிறது[4].

இந்த நீண்ட காதணியை யுடையவள் இந்தத் தோப்பிலே யிருக்கிற தேவதாஸ்திரீயோ[5] அல்லாமல் ஒரு மயிலோ அல்லாமல் ஒருமனுஷ ஸ்திரீயோ[6] இவளை இன்னாளென்று நிச்சயிக்கப் படாமல்[7] என்னெஞ்சு மயங்குகின்ற தென்றவாறு.

சித்திரத்தில்[8] எழுதப்படாத வடிவான படியினாலே தேவதாஸ்திரீயோ என்றும், நிறத்தினாலேயும்[9] சோலையிலே நிற்கிறத்தினாலேயும்[10] மயிலோ வென்றும், தன் மனது அவள் மேலே ஆசைப்பட்ட படியினாலேயும் அவள் தன்னைப் பார்த்தபடியினாலேயும் மனுஷஸ்திரீயோ வென்றும் சந்தேகப்பட்டதாம்.

1082. நோக்கினா னோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து*

என்பது

மனுஷஸ்திரீ யென்று நிச்சயம் பண்ணின தலைமகன் அவள் பார்வையினாலே தனக்கு வந்த வருத்தம் சொல்லுகிறது

இப்படிப்பட்ட அழகுடையவள் எனக்கெதிரே நின்று
  1. பாத்து-காகிதச் சுவடி
  2. வருத்துகிறதை
  3. இது பரிமேலழகர் தந்த பாடம் கனங்குழை அச்சு நூல்
  4. ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் கொடுத்த துறையை இவ்வுரை யாசிரியர் தன் சொந்த நடையில் தந்துள்ளார்
  5. ஸிதிறியோ என்பது காகிதச் சுவடி
  6. ஸிதிறியோ என்பது காகிதச் சுவடி
  7. மாட்டாமல்
  8. எழுதலாகாத
  9. சாயலும்
  10. நிற்கிறதினாலேயும்