பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

449

நான் பார்க்கிற போது தான் பாராமல் நாணியிருந்தும். நான் பாராத போது *(உற்று நோக்கியும் வருதலால் 'களவு கொள்ளும் என்றான்.

1093. நோக்கினா னோக்கி யிறைஞ்சினா ளஃதவள்

யாப்பினு ளட்டிய நீர்

என்பது

பார்வையினாலும் நாணினாலும் அறிந்தது. நான் பாராத போது) *தான் என்னை அன்போடு நோக்குவள்.

நான் பார்த்தால் *[1] மனதிலே யொன்றை நினைத்துக் கொண்டு நாணி நிற்பள்; அவள் பார்வை அன்பென்கிற பயிருக்கு வார்த்த தண்ணியாயிற்று[2] என்றவாறு.

அவள் பார்வையினாலே ஆசை அதிகமா மென்பது.

1094. யானோக்குங் காலை நிலனோக்கும் நேக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்

என்பது

நாணினாலும் மகிழ்ச்சி[3] யினாலும் அறிந்தது: நான் தன்னைப் பார்க்கிற போது தான் என்னெதிரே பாராமல் வணங்கி நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும், அதையறிந்து நான் பாராவிட்டால் தானென்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ந்து சற்றே நகைப்ப ளென்றவாறு.

மகிழ்கிறது, புணர்தற் குறிப்பாமென்பது.

1095. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

என்பது (இதுவுமது)

என்னைச் செவ்வையாய்ப் பாராமல் ஒரு கண்ணைச் சிமிட்டி


*முதல் *வரை பிறரால் எழுதப்பட்டுள்ளன; அச்சு நூல்

  1. அச்சு நூலிலில்லை
  2. தண்ணீராயிற்று
  3. மகிட்சி என்பது காகிதச் சுவடி