பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

451

என்பது, தன்னைப் பார்த்து மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது:

என் மேல் கோபம்போல் சொன்ன வார்த்தையைப் பொறுக்க மாட்டாமல் நான் பிரியம் வரத்தக்கதாகப் பார்த்த பார்வையை அவளறிந்து மனது சந்தோஷப்பட்டுத் தன்னுள்ளே நகையா நின்றாள்; நுடங்கிய இயல்பையுடையவளுக்கு அந்த நகையினாலே தோன்றுகின்ற தொரு நன்மைக் குறிப்புண்டு என்றவாறு.

அந்த நன்மைக் குறிப்பாவது, தன் மேலே தயையுடையவன் என்பதாம்.


1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே யுள

என்பது

தோழி மதியுடன் படுகிறவள்[1] தன்னுள்ளே சொல்லியது. முன்னறியாதார்போல் ஒருவரையொருவர் பொதுநோக்கத்தால் நோக்குதல், இக்காதலையுடையார் கண்ணேயுண்டா மென்றவாறு.

பொதுநோக்காவது, எல்லாரையும் ஒரு சரியாய்ப் பார்க்கிறதாம். புறத்திலே ஒருசரியாய்ப் பார்த்தாலும் உள்ளே காதலாரிட(த்திலே) யன்புண்டாமென்பது.

1100. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க

ளென்ன பயனு மில

என்பது (இதுவுமது)


*முதல் *வரை 1098ஆம் குறட்குரை காகிதச்சுவடியில் இல்லை; அச்சு நூலினின் றெடுக்கப்பட்டது.

  1. மதியுடம்பாடு-குறிப்புரை காண்க.