பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



452

திருக்குறள்

தாமிருவரும் ஒருவர் கண்களோ டொருவர் கண்கள் ஒக்கப் பார்த்தால், வாயினால் சொல்லுகிற சொற்களென்ன பயனுடைத்தாமென்றவாறு.

பார்வையினாலே யிரண்டுபேரும் ஒருமித்தால் அதுவே அமையும்; மனதிலே தயையில்லா விட்டால், வாயினாலே சொல்லுகிற சொற்கள் ஒருபயனு மில்லாமற் போமென்பது.

ஆக அதிகாரம் ளᏇக்குக் குறள்சத

இது புணர்தனிமித்தியம்

இப்பால் 111. புணர்ச்சிமகிழ்தல்

என்பது, அப்படிக் குறிப்பாலறிந்து புணர்ந்த தலைமகன் புணர்ச்சியை மகிழ்ந்து கூறுகிறதாம்.

1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு

மொண்டொடி கண்ணே யுள

என்பது இயற்கைப் புணர்ச்சியினுடைய கடைசியிலே சொல்லுகிறது.

கண்ணினாலே கண்டு செவியினாலேகேட்டு நாவினாலே யுண்டு மூக்கினாலே மோந்து மெய்யாகிய உடம்பாலே தீண்டி அனுபவிக்கப்பட்ட ஐம்புலனும் நல்ல வளையலையுடைய இந்த ஶ்ரீயினிடத்திலேயுண்டாச்சுது[1] என்றவாறு.

வேறு வேறு காலங்களிலே வேறுவேறு பொருள்களா லனுபவிக்கப்பட்ட வைம்புலனும் ஒருகாலத்திலே இவளிடத்திலே யனுபவிக்கப்பட்டன என்பதாம்.

1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து

என்பது இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது;

வாயு பயித்தியம் சேற்றுமம்[2] இது முதலான வியாதிகளுக்கு


  1. யுண்டாயிற்று
  2. வாதபித்த சிலேத்துமம்