பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



454

திருக்குறள்

1105. வேட்ட பொழுதி னவையவை போலுமே

தோட்டார் கதுப்பினா டோள்

என்பது தோழியிற் கூட்டத் திறுதிக்கட் சொல்லியது:

மெத்தவும் பிரியமான பொருள்களைப் பெறாமல் அவற்றின்மேல் விருப்ப முண்டான பொழுது அந்தப்பொருள் தாமே வந்து சுகத்தைப் பண்ணுமாறு போல, இன்பத்தைப் பண்ணும். எப்பொழுதும் பெற்றுப் புணர்ந்தாலும் பூவினை யணிந்த கூந்தலையுடைய ஶ்ரீ தோள்க ளென்றவாறு.

ஶ்ரீகளைப் புணரப் பின்னையும் ஆசையதி கமாமென்றவாறு.

1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டலாற் பேதைக்

கமிழதி னியன்றன தோள்

என்பது (இதுவுமது) தன்னைப் புணராமல் வாடுகிற என்னுயிர் அவளைப் புணர்ந்தபோதெல்லாம் துளுக்கிற[1] படியினாலே இந்த ஶ்ரீக்குத் தோள்கள் தீண்டத்தக்கதொரு அமுதத்தினாலே செய்யப்பட்ட தென்றவாறு.

துளுக்கிறதாவது[2] இன்பத்தினாலே மகிழ்கிறதாம்.

1107. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

என்பது இவளை நீ* மணந்து கொண்டு உலகோர் தமது


*குறிப்பு இந்தச் சுவடியில் பக்கம் 740 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது1.

இதுவரையுந்தான் இந்தச்சுவடியில் இருக்கிறது

இனிவரும் பகுதிகள் : பாரதீயஞான பீடம் தமிழ்வரிசை நெ 1. தொகுத்தவர்: பேராசிரியர் அ. சக்கரவர்த்தி: உரையாசிரியர். கவிராஜபண்டிதர்; சாது அச்சகம், இராயப்பேட்டை சென்னை என்னும் நூலிலிருந்து நிறைவு செய்யப் பெற்றது

இரண்டு நூல்களுக்குமே பாட பேதங்கள் நிரம்ப இருக்கின்றன.


  1. தளிர்க்கிற (துள்ளுகிற-அச்சு நூல்)
  2. துள்ளுகிறதாவது (அச்சுநூல்)