பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

திருக்குறள்

புருஷர்களுக்குப் பிரிவென்கிற தொன்றுண்டு. அது பரத்தையரைச் சேருகிறதும், அதையறிந்து பெண்சாதி பிணங்கி நிற்கிறதும், தன்மேலே தப்பில்லை யென்று சொல்லி அப்பிணக்கைத் தீர்க்கிறதும், பிற்பாடு இரண்டுபேரும் சம்மதித்துப் புணர்கிறதும் என இவை முன்மணந்தவர்கள் பெற்றபலன்: அப்பயன் இருதலைப்புள்[1]ளின் ஓருயிராய உழுவலன்புடைய[2] எமக்கு வேண்டா என அம்மணந்தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.

1110. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்

செறிதோறும் சேயிழை மாட்டு

என்பது புணர்ந்துடன் போகிறவன்[3] தன்னுள்ளே சொ நூல்களாலும் நல்ல அறிவினாலும் பொருள்களை அறிய அறிய முந்தின அறிவில்லாமை கண்டாற்போலச் சிவந்த இழையினை யுடையாளை இடைவிடாது செறியச் செறியக் காதல் அவளிடத்திலே காணப்படுகின்றது என்றவாறு.

களவிற் புணர்ச்சியில் அநேக இடையூறுகளால்[4] எய்தப் பெறாமல் ஆசையுற்றவன் இதுபொழுது இடைவிடாமற் புணர்ந்த மகிழ்ச்சியினாலே அளவில்லாத ஆசையுண்டாயிற் றென்பதாம். இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகளுக்கு முண்டானாலும் அவளிடத்திலே குறிப்பாலாகிற தல்லாமல் வசனத்தாலே ஆகிறதில்லை.

ஆக அதிகாரம் ள௰க்குக் குறள் சதள௰

இப்பால் 112. நலம் புனைந்துரைத்தல்

என்பது, தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லுகிறது.

1111. நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு

மென்னீரள் யாம்வீழ் பவள்

என்பது இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது.


  1. இரண்டு தலைகளை யுடைய பறவை
  2. மிகுந்த அன்பு
  3. குறிப்புரை காண்க
  4. இடையீடுகள், தடைகள்