பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருக்குறள்

சந்திப்பிழைகளும் சொற்பிழைகளும் மலிந்து இருந்த இச்சுவடியில் அவையாவும் திருத்தப்பட்டன. எனினும்,

உண்ணப் பட்டவர்களுக்கு (12) (உண்பவர்க்கு) அறியப்பட்ட ( 27) - (அறிகிற)

உண்டாக்கப்பட்ட (100) - (உண்டாக்கும்) என்றாற் போன்ற இடங்களில் செயப்பாட்டு வினைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வருகிறதற்கு, செய்கிறதற்கு என்பவை வருகிறதுக்கு (51) செய்கிறத்துக்கு (26) என்று விரித்தல் விகாரம் பெற்ற சொற்கள் பற்பல பயன்படுத்தப்பட்டுள்ளன.

நினைச்சு (நினைத்து) (22), கோபிச்சு (கோபித்து) - (135) என்ற போலிச் சொற்கள் பெரும்பான்மை.

சரி என்ற சொல் சமானம் என்ற பொருளிலும்,

ஆனபடியினாலே என்ற சொல்லும், இப்போ (இப்பொழுது) அத்தை (அதனை), எத்தை (எதனை) என்றாற் போன்றனவும் இச்சுவடியில் நிறைய உண்டு. மிகவும் என்ற பொருளில் மெத்த என்ற சொல்லும், வேண்டும் என்ற விடத்தில் வேணும் என்பதும் பெரும் பான்மையாகவுள்ளன.

பிறத்தியிலே, பிறத்தியார், பெண்சாதி (மனைவி). இதுகளை (இவற்றை) இது முதலானதுகளை, நினைத்ததுகள் என்பவை நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தன்னுடைய என்ற விடத்துத் தன்னிடவென்றும்,
செய்கிற - செய்யுற என்றும்,
போகிற - போற என்றும்,
விற்கிற - விக்கிற என்றும்
கேட்கிற - கேழ்க்கிற என்றும்
மாம்சம் - மாங்கிசம், மாங்கிஷம் என்றும்
வம்சம் - வங்கிஷம் என்றும்
இருக்கிறது - இருக்குது என்றும்

பல விடங்களில் காணப்படுகின்றன.