பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

461

1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
            திருநுதற் கில்லை யிடம்

என்பது, இடந்தலைப்பாட்டின் கண் தலைமகள் நீங்கினபோது சொல்லியது:

என் கண்ணிலே கருப்பு விழியிலே யிருக்கிற பாவாய்! நீ அவ்விடத்தை விட்டு அப்பாலே போ; நீ போகாவிட்டால், என்னாலே வாஞ்சிக்கப்பட்ட நல்ல முகத்தையுடையவளுக்கு இருக்க இடமில்லை என்றவாறு.

நான் இந்த ஸ்திரீயைக் காணாவிட்டாலும், இவள் என் கண்ணுக்குள்ளே யிருக்கிற தல்லாமல் அப்பாற் போகிறதில்லை; ஆனபடியினாலே உன்னுடனே கூடியிருக்க இடமில்லை: நின்னைப் பார்க்கிலும் நல்லவளான படியினாலே நீ அவளுக்கு அந்த இடத்தைக் கொடுத்து அப்பாலே போவாய் என்பதாம்.

1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
            அதற்கன்ன ணீங்கு மிடத்து

என்பது, பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது:

தெரிந்த இழையினை யுடைய இவள் எனக்குப் புணருமிடத்து உயிருக்கு உடம்போடு கூடி வாழ்கிறதோ டொக்கும்; இவள் பிரிந்த போது உயிர் உடம்பை விட்டு நீங்கிச் சாகிறதோ டொக்கும் என்றவாறு.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
            ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

என்பது, ஒருவழித் தணந்து வந்த தலைமகன் பிரிந்த போது எம்மையும் நினைத்து அறிவையோ என்ற தோழிக்குச் சொல்லியது:

நல்ல சண்டையைப் பண்ணுங் கண்ணையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின் நினைப்பேன்: ஒரு க்ஷணமாகிலும் மறந்தறியேன்; ஆனபடியினாலே நினைக்கிறதையும் அறியேன் என்றவாறு.