பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

463

காதலர் என் நெஞ்சினுள்ளே இருக்கிறாரான படியினாலே, நான் சாப்பிடுகிற போது வெம்மையுள்ள வஸ்த்துக்களைச் சாப்பிடுவதற்குப் பயப்படுகிறேன். அவருக்கு வாதை அதனால் வருமோ என்றஞ்சி என்றவாறு.

எப்பொழுதும் என் நெஞ்சில் இருப்பவரைப் பிரிந்து போனாரென்று எண்ணுவது என்ன புத்தி என்பது குறிப்பு.

1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

யேதில ரென்னுமிவ் வூர்

என்பது, நாயகன் பிரிந்து போனது[1] பொறாமல் வருந்திய தலைமகளைக் கண்டு தோழி தலைமகனைப் பழித்தமை அறிந்து, தலைமகள் இயற்படச் சொல்லியது:

என் கண் இமைத்து மூடினால், கண்ணுக்குள்ளே இருக்கிற காதலர் மறையப் போகிறார் என்று கண் சிமிட்டேன்: இப்படி யிருக்கையிலேயும் அவரைத் “துயிலா - நோய் செய்தார். அன்பிலர்” என்று சொல்லுவர், இந்த ஊரார் என்றவாறு.

ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தாரென்று பழிக்க வேண்டா மென்பதாம்.

1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ

ரேதில ரென்னுமிவ் வூர்

என்பது, இதுவுமது.

காதலர் எந்நாளும் என் மனத்திலே சந்தோஷத்துடனே இருப்பர்; அதையறியாது “அவர் பிரிந்து போயினார்: அன்பில்லாதவர்” என்று சொல்லுவர், இந்த ஊரார் என்றவாறு.

பிரியாமையும் அன்பும் உடையாரை அவை இல்லாதவ


  1. பிரிந்துபோனது வரைவிடைவைத்து அதாவது திருமணம் செய்து கொள்வதற்கு வேண்டிய பொருளைத்தேடப் பிரிதல்.