பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

45

பரஸ்திரி, பரஶ்ரீ, ஶ்ரீகள், ஸ்திரீகள் என்று இவ்வடியிலேயே காணப்படுகின்றன.

காக்காவிட்டால் என்பது காராவிட்டால் என்றே காணப்படுகிறது.

இல்வாழ்க்கை இல்வாட்கையாகவுள்ளது. மனை வாழ்க்கையும் மனைவாட்கையே.

ஒருகால் என்பது ஒருக்கால் என்றுள்ளது. அழுக்காறு என்பதற்குப் பொறுப் பற்றுப்படுதல் என்பது புது வகையான விளக்கம் (35, 135).

போக்கடிக்கப் போகாது, சொல்லப் போகாது, கடக்கப் போகாது என்ற வட்டார வழக்குச் சொற்றொடர்களும் உண்டு.

இங்ஙனம் பேச்சுவழக்குத் தமிழிலே இவ்வுரை அமைந்திருக்கிறது என்பது இவ்வுரை பற்றிக் கூற வேண்டியுள்ளது.

நன்றியுரை:- திருக்குறட்கு ஜைனச் சார்பான வுரை கூறுகிற இந்தக் காகிதக் கையெழுத்துச் சுவடியைச் செப்பனிட்டு ஆய்ந்து அச்சுக் கேற்ற வகையில் குறிப்புரை முன்னுரை முதலியன எழுதும் இப்பணிக்குப் பல அன்பர்கள் எளியேற்க்கு உறு துணையாயிருந்து ஊக்கமளித்துள்ளார்கள். அவர்கள் யாவர்க்கும் நன்றி செலுத்துவது முதற் கடமையாகும்.

இச் சுவடி ஆய்வுப் பணியை எளியேனுக்கு 7 - 3 - 1987 இல் அளித்தவர், அந்நாளில் நிர்வாக அதிகாரியாய் இருந்த திரு அ. பஞ்ச நாதன் M.A., BLib. Sc., அவர்கள் ஆவர். அவர்கட்கு முதற்கண் நன்றி.

காலதாமதம் ஆயினும் இப்பணியைச் செவ்வனே நிறை வேற்றுதற்கு வேண்டிய ஊக்கங்களை அளித்த இந்நாள் நிர்வாக அதிகாரியும் துணை ஆட்சியரும் ஆகிய திரு.சி. கிருஷ்ணன் அவர்கட்கு என் நன்றியுரியதாகுக.