பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

திருக்குறள்

அவரும் என்போல் வேதனைப் பட்டால் அறிவார் என்பதாம். ௰

ஆக அதிகாரம் ளக௪ க்குக் குறள் சதள௪௰

இப்பால் 115. அலரறிவுறுத்தல்

என்பது, பலரும் “இவள் தன் நாயகனைப் பிரிந்து வாடுகிறாள்” என்று அலர் கூறுவதைத் தலைவனுக்குத் தோழி சொல்லி யறியப் பண்ணுகிறது.

1141. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்

பலரறியார் பாக்கியத் தால்

என்பது, நீ பிரிந்து போனது வெளிப்பட்டு எல்லாரும் அறிந்து அலராக வார்த்தை சொல்லுகிறார்கள் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது:

அப்படி எல்லாரும் ‘இவள் வருந்துகிறாள்’ என்று சொல்லவே, என்னுடைய பிராணன் நிற்கிறது; அதனை நான் செய்த பாக்கியத்தாலே பலரும் அறியார் என்றவாறு.

இவள் வருந்துகிறாள் என்று சொல்லக் கேட்டபடியினாலே இவள் வருத்தம் தீர்க்க வேணு மென்று தன் சீவன் இருக்கிறது; இல்லாவிடின் பிரிந்த பொழுதே போம் என்பதாம்.

1142. மலரன்ன கண்ணா ளருமை யறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்

என்பது இதுவுமது.

மலரைப் போலும் கண்ணையுடையவளது எய்தற்கருமை அறியாமல் இந்தவூரார் அவளை எளியவளாக்கி அலராகிய வசையைச் சொல்லி எனக்கு உபகாரத்தைச் செய்கின்றார் என்றவாறு.

உபகாரம் செய்தலாவது, தன் பிராணனை நிறுத்துகிறதாம்.