பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

469

1143. உறாஅதோ வூரறிந்த கெளவை[1] யதனைப்
            பெறாஅது பெற்றன்ன நீர்த்து

என்பது, இதுவுமது.

எனக்கும் தலைமகளுக்கும் கூட்டம் உண்டானதை இந்த ஊரார் அறிந்த படியினாலே, இவர்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்ட என்னுடைய மனது, அவள் கூட்டத்தைப் பெறாமலிருந்தாலும் பெற்றதுபோல் இன்பமுடையதானது என்றவாறு. இன்பமானது, அவள் கூட்டத்தை நினைக்கிற சந்தோஷமாம்.

1144. கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
            தவ்வென்னுந் தன்மை யிழந்து

என்பது, இதுவுமது.

என்னுடைய காமம் இந்த ஊரார் சொல்லுகிற வசை வார்த்தையாலே அதிகமாயிற்று. அவர்கள் சொல்லாமல் இருந்தால், முன்பு நினைத்த மட்டிலேயும் இராமல் அடங்கிச் சுருங்கிப் போம் என்றவாறு.

1145 களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
           வெளிப்படுந் தோறு மினிது.

என்பது இதுவுமது.

கள்ளைக் குடிக்கிறவனுக்குக் களிக்குந்தொறும் கள்ளுண்டல் நன்றாயிருக்கும்; அதுபோல் எனக்குக் காமம் பலரும் வசை சொல்லுகிற பரியந்தம் நன்றாம் என்றவாறு. களிப்பு, மிகுந்த சந்தோஷம்.

1146. கண்டது மன்னு மொருநாள் அவர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று

என்பது.[2]



  1. கெளவை - அலர்
  2. பரிமேலழகர் துறைவிளக்கம் இங்கிருந்து குறள் 1155 வரை கொடுக்கப் பெறவில்லை.