பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

திருக்குறள்

ழலுகிற[1] வினைகள் அறிந்து எனக்குச் சொல்லா நின்றன; நீ யறிவிக்க வேண்டாம் என்றவாறு.

வளைகள் அறிதலாவது, கையிலே இந்தண்டைக் கந்தண்டை யுழலுகிறதனாலே யறிந்த தென்றும், நாயகன் பிரிந்து போகிறா னென்று கேட்டவுடனே சரீரம் வாடிக் கை வளைகள் கழன்று தாழ விழுகிறதனாலே யறிவித்த தென்றுமாம்.

‘நீ அவன் பிரிவைக் கெட்டியாக உண்டாக்குவித்து வந்து சொல்லுகிறதினாலே, நீயும் இந்த வளைகள் செய்தனவே செய்தாய்’ எனப்புலந்து சொன்னதாம்.

1158. இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு

மின்னா தினியார்ப் பிரிவு

என்பது

ஸ்திரீகளுக்குத் தங்கள் குறிப்பையறியும் தோழியர் இல்லாத ஊரிலே இருந்து வாழ்கிறது பொல்லாதாயிருக்கும்; அதிலும் பொல்லாதாயிருக்கும் தங்கள் நாயகனைப் பிரிகிறது என்றவாறு.

1159. தொடிற்சுடி னல்லது காமநோய் போல

விடிற்சுட லாற்றுமோ தீ

என்பது

நெருப்புத் தன்னைத் தொட்டாற் சுடுமல்லாமல் காமநோய் போலப் பிரிந்தவர்களைச் சுடமாட்டுமோ? மாட்டாது என்றவாறு.

காமம் எத்தனை தூரத்திலே யிருந்தாலும் சுடும் என்பதாம்.

1160. அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்

என்பது, தலைவியர் பிரிவாற்றியிருப்பர்; நீ அப்படி யிருக்கவில்லை என்ற தோழிக்குச் சொல்லியது:


  1. நின்றுழலுகிற-நின்றும் கழலாநின்ற (பரிமேலழகர்)