பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

திருக்குறள்

இப்படி அதிகமாகிறதை மறைக்கிறது எப்படி என்பதாம்.

1162. காத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலு நாணுத் தரும்

என்பது, இவ்விடத்திலே யிருக்கிறவ ரறியாமல் மறைத்தல்

நாயகன் அறியத் தூது விடல் இரண்டனுள் ஒன்று செய்ய வேணும் என்ற தோழிக்குச் சொல்லியது:

இந்தக் காம விரக நோயை மறைக்கவு மாற்றேன்; இந்த நோயைத் தந்தவர்க்குச் சொல்ல வேணுமென்றாலும் எனக்கு வெட்கமாயிருக்கிறது; இதற்கு என்ன செய்வேன் என்றவாறு.

காம நோய் ஒரு காலைக் கொருகால் அதிகமாதலிற் கரத்தலு மாற்றேன் என்றும், நாயகன் அண்டைக்குத் துாது அனுப்பினால் இன்னும் பிராணனுடனிருக்கிறாள் என்றறியப்படும். ஆதலால் நாணுத் தருமென்றும் கூறினாள்.

1163. காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்

னோனா உடம்பி னகத்து

என்பது (இதுவுமது)

காம நோயும், அதனைச் செய்தவர்க் கறிவிக்கிறதற்கு ஒட்டாத வெட்கமும், என்னுடைய உடம்பிலே உயிர் காவடித் தண்டாக அதன் இருபுறத்தும் தூங்கா நிற்கும் என்றவாறு. தூங்குகிறதாவது, காமமும் நாணமும் ஒன்றற் கொன்று அதிகமாகாமல் சரியாயிருக்கிறதாம்.

1164. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து

மேமப் புணைமன்னு மில்

என்பது (இதுவுமது)

யாவர்க்கும் உளவாய் வருகின்ற காமக் கடலும் புணையும் என்னும் இரண்டனுள்ளும் எனக்குண்டாகின்றது காமக்கடலே; அதனை நீந்தும் அரணாகிய தெப்பமில்லை என்