பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

திருக்குறள்

யிலேயும் ஒருவரும் துணையில்லாமல் நான் மாத்திரம் தனியே இருக்கிறேன்; இது என்வினைப்பயன் என்றவாறு.

கரைகாணாதது ஒரு காலைக் கொருகால் அதிகமாகிறது.

1168. மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
            என்னல்ல தில்லை துணை

என்பது, இரவின் கொடுமை சொல்லி யிரங்கியது:

இந்த இராத்திரி யானது இந்த வுலகத்திலே இருக்கிற சீவன்களை யெல்லாம் தானே நித்திரை போகப் பண்ணின படியினாலே என்னையல்லாமல் வேறு துணையில்லை என்றவாறு.

நான் துணை யாகிறது, நித்திரையில்லாமல் விழித்துக் கொண்டிருத்தல்; ராத்திரியும் எங்கும் பரவியிருக்கிறது. ஆதலின் நானே துணையானேன் என்பதாம்.

1169. கொடியார் கொடுமையிற் றாங்கொடிய இந்நாள்
            நெடிய கழியு மிரா

என்பது இதுவுமது

இந்த ராத்திரிக் காலங்கள் நாயகனோடு கூடி இன்பமுற்ற நாள்களிலே கொஞ்சமாயிருந்து, நாயகனைப் பிரிந்து வருத்தப்படும் நாளில் பெரியனவாய், அக்கொடியார் கொடுமைக்கு மேல் கொடுமை செய்கின்றன என்றவாறு.

நாயகனைப் பிரிந்த வருத்தத்தினாலே ராத்திரிக் காலம் நெடியதாய்ப் பொல்லாதாய் இருக்கின்றது என்பதாம்.

1170. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
            நீந்தல மன்னோவென் கண்

என்பது, உன் கண்கள் பேரழகு அழிகின்றன. ஆதலின் நீ அழ வேண்டா மென்ற தோழிக்குச் சொல்லியது.