பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

379

மனது போலக் காதலர் உள்ள தேசத்துக்குக் கொப்பெனப் போகத் தக்க வாயின் என் கண்கள் இங்ங்னம் வெள்ளமாகியதந்நீரை நீந்தா என்றவாறு.

மனதிற்குச் செலவாவது நினைக்கிறதான படியினாலே, உள்ளம் போலக் கண்கள் கடிதிற் செல்லமாட்டா என்பது கருத்து.

ஆக அதிகாரம் ள௧௭ க்குக் குறள் சதள௭௰

இப்பால் 118. கண்விதுப்பழிதல்[1]

என்பது , கண்கள் நாயகனைக் காணாமல் வருந்தி வாடி விசாரப்படுகிறது.

1171. கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது

என்பது, நின் கண்கள் வருந்துகின்றன: நீயாற்றவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது:

இத்தணியா வியாதியை நான் அறிந்தது, இந்தக் கண்கள் காதலரை எனக்குக் காட்டின படியினாலே யன்றோ? இப்போது நம்மைக் காட்டச் சொல்லித்தாம் அழுகின்றது எப்படி என்றவாறு.

இப்பொழுதும் தாமே காட்டுகிற தல்லாமல் நாம் காட்டுகிறது எங்கே என்பதாம்.

1172. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பிரிந்துணராப்

பைத லுழப்ப தெவன்

என்பது இதுவுமது

மேல்வருகிறதை ஆராய்ந்து அறியாமல் அன்று காதலரைப் பார்த்து நின்ற கண்கள், இன்று இத்துக்கம் நம்மாலே வந்ததான படியினாலே பொறுக்க வேணு மென்று எண்ணாமல் விசாரப்படுகிறது என்கருதி என்றவாறு.


  1. விதுப்பு - விரைவு