பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



480

திருக்குறள்

மேல் வருகிறதாவது, நாயகன் பிரிந்து போய் வருத்துதல், முன்னே வருவதை யறிந்து காவாதவர்கள், அது வந்தால் பொறுக்க வேணுமல்லாமல் விசாரப் பட்டால் தீராது என்பதாம்.

1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து

என்பது இதுவுமது

இந்தக் கண்கள் அன்று தாமே காதலரை விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்து அழுகிற இது நம்மாலே சிரிக்கத்தக்க வியல்பை யுடைத்து என்றவாறு.

வருகிற காரியத்தை முன்னே அறிந்து பரிகரித்துக்கொள்ளாதவர் பலராலும் நகைக்கப் படுவர் என்பதாம்.

1174. பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா

வுய்வினோ யென்க ணிறுத்து

என்பது இதுவுமது

இந்தக் கண்கள் யான் கடைத்தேற மாட்டாமலுக்கேதுவாகிய ஒழிவில்லாத நோயை என்னிடத்திலே நிறுத்தித்தாம் அழமாட்டாமல் நீர் வற்றிவிட்டன என்றவாறு.

நோயை நிறுத்துதலாவது, பிரிந்து போகிறதும் பின்பு வந்து கூடாமையும் உடையாரைக் காட்டியதனால் நோயை நிலைபெறச் செய்தல். இன்னாத காரியத்தை எமக்கு முன்பு செய்தபடியினாலே, தமக்குப் பொல்லாங்கு தானே வந்தது என்றவாறு.

தமக்குப் பொல்லாங்காவது தாமே வருந்திவாடுகிறது.

1175. படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக்

காமநோய் செய்தவென் கண்

என்பது இதுவுமது

எனக்குக் கடலினும் பெரிதாகிய காமநோயைச் செய்த என் கண்கள், அந்தப் பாவத்தினாலே தாமும் நித்திரையில்லாமல்