பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

481

துக்கப்பட்டு அழுகின்றன என்றவாறு.

காமநோய் பார்வையினால் வந்தபடியினாலே, அதைக் கண்கள் செய்ததாகக் கூறினாள்.

1176. ஓவு வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்

தாஅ மிதற்பட் டது

என்பது இதுவுமது.

இந்தக் காமநோயினைச் செய்த கண்கள் தாமுந் துயிலாமலழுகிறது மிக நன்று என்றவாறு.

தம்மாலே வருத்தமுற்ற எமக்கு அவ்வருத்தம் தீர்ந்தாற் போன்றது என்பதாம்.

1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து

வேண்டி யவர்க்கண்ட கண்

என்பது இதுவுமது

அன்று காதலரை ஆசைப்பட்டுக் கண்டகண்கள், இன்று துங்காமல் அழுங்கலாகிய துன்பத்தினை யனுபவித்துத் தம்முள்ளே யிருக்கிற நீர் அற்றேபோக என்றவாறு.

கண்கள் அழுதழுது நீரற்றுப் போகு மென்பதாம்.

1178. பேணாது பெட்டா ருளர்மன்றோ மற்றவர்க்

காணா தமைவில கண்

என்பது, “காதலர் பிரிந்து போனவரல்லர்; அவர் இங்கேதானே யிருக்கிறார்; அவரைக் காணுமளவும் நீ பொறுக்க வேணும்” என்ற தோழிக்குச் சொல்லியது:

மனத்தில் ஆசையில்லாமல் பேச்சு மாத்திரத்தில் ஆசையுடையவர் இங்கேயிருக்கிறார்; அவராலே பலன் என்ன? அவரைக் கண்கள் காணாதமைகின்றன வில்லை என்றவாறு.