பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



482

திருக்குறள்

சொன்னபடி செய்யாதவர்களாலே ஒரு பிரயோசனமுமில்லை என்பதாம்.

1179. வாராக்கால் துஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை

ஆரஞ ருற்றன கண்

என்பது “நீயுமாற்றி நின் கண்களும் துயில்வன வாதல்வேண்டும்” என்ற தோழிக்குச் சொல்லியது:

காதலர் வாராத நாளிலே வரவு பார்த்துத் துாங்காது, வந்த நாளிலே அவர் பிரிந்து போகப்போகிறார் என்கிற பயத்தினாலே தூங்கா; ஆனபடியினாலே இரண்டு வகையாலேயும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையுடையன என்றவாறு.

என் கண்களுக்கு எந்நாளும் நித்திரையில்லை யென்பதாம்.

1180. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போல்

அறை பறை கண்ணா ரகத்து

என்பது, “காதலரை இந்த வூரார் பழியாமல் அவர் கொடு மையை மறைக்க வேண்டும்” என்ற தோழிக்குச் சொல்லியது: யான் காதலர் கொடுமையை மறைத்துக் கொண்டிருக்கவும் என் கண்கள் வாடிப் புலர்ந்திருக்கிறதினால், இந்தவூரார்க்கு நான் மறைக்கிறதை அறிகிறது மெத்த எளிது என்றவாறு.

உள்ளே யிருக்கிறதைப் புறத்தியாருக்கு அறியப் பண்ணுகிறதினாலே அறை பறை கண் என்றார்

பாலை நிலம் முற்றும்

ஆக அதிகாரம் ளகஅ க்குக்குறள் சநகஅ௰

இப்பால் 119. பசப்புறு பருவரல்[1]

என்பது, நாயகன் பிரிந்து போனதைப் பொறுக்க மாட்டாமையினாலே உடம்பு வேறுநிறமாய் வெளுத்துப் பசலை பூக்கிறதாம்.


  1. பசப்பு - பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. பருவரல் துன்பம்