பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

483



1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க் குறைக்கோ பிற

என்பது, முன்பு நாயகன் பிரிந்து போனதற்குச் சம்மதித்த நாயகி பிற்பாடு அதுபொறுக்க மாட்டாமற் பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது:

என்னை நயந்தவரை என்னிடத்திலே வைத்திருக்கப் பொறாமல் அவர் பிரிந்து போதற்கு உடன்பட்ட நான, அவர் பிரிந்து போனபிறகு அதுபொறுக்க மாட்டால் பசலையான என் இயல்பை யார்க்குச் சொல்வேன் என்றவாறு.

1182. அவர்தந்தார் என்னுந் தகையா லிவர்தந்தென்[1]

மேனிமே லூரும் பசப்பு

என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

யான் பொறுத்துக்கொண்டிருக்கவும் இந்தப் பசலை நிறம் தன்னை உண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தால் என் உடம்பு மேலெல்லாம் பரவா நின்றது என்றவாறு.

1183. சாயலு-நாணு மவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையுந் தந்து

என்பது, அழகும் நாணும் அழியாமற் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது:

நாயகன் பிரிந்தவன்றே என் அழகையும் நாணத்தையும் தாம் வாங்கிக் கொண்டு, காம நோயினையும் பசலையையும் எனக்குத் தந்து போனார் என்றவாறு.


  1. இவர் தந்து - மேற்கொண்டு