பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



484

திருக்குறள்

1184. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்

கள்ளம் பிறவோ பசப்பு

என்பது*, பிரிந்து போனவர் சொன்ன சொற்களை யான் மனத்திலே நினைக்கிறேன்; வசனத்தாலே சொல்லுகிறதும் அவர் நன்மைகளையே; இப்படிச் செய்யா நிற்கவும் பசலை வந்தது கள்ளமாயிருந்தது என்றவாறு.

யான் பொறுத்துக் கொண்டிருக்கவும் பசலை எப்படிவருகிறது என்பதாம்.

1185. உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்

மேனி பசப்பூர் வது

என்பது, காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்குச் சொல்லியது:

என்னுடைய நாயகன் பண்டு பிரிந்து உங்கே[1] போகவும் இங்கே என்மேனி பசலை யூர்கின்ற தன்றோ, இப்போதும் அப்படி யல்லாமல் வேறொன்றாமோ என்றவாறு.

1186. விளக்கற்றம்[2] பார்க்கு மிருளேபோற் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

என்பது இதுவுமது.

விளக்கு அவிந்து வருகிறது பார்த்துக் கொண்டிருந்து இருள் வருகிறது போல், நாயகன் பிரிந்து போகிறது பார்த்துக் கொண்டிருந்து பசலை வரு மென்றவாறு.

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி

லள்ளிக்கொள் வற்றே பசப்பு

என்பது இதுவுமது.


* இங்குப் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு.

  1. உங்கே - மிக்க தொலையும் மிக்க அண்மையுமில்லாத நடுவிடம்
  2. அற்றம் - மெலிவு