பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

485

முன்னொருநாள் நாயகனைக் கட்டித் தழுவிக்கொண்டிருந்த நான் அறியாமல் விட்டு நெகிழ்ந்தேன்; நெகிழ்ந்தவுடனே பசலை வந்து அள்ளிக் கொள்வது போல் என்மேனி யெல்லாம் நிறைந்தது என்றவாறு.

1188. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்

துறந்தா ரவரென்பா ரில்

என்பது, நீ இபபடிப் பசக்கலாகாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.

இவள் பொறுத்திராமல் பசலை யானாள் என்று என்னைப் பழிக்கிறவர்களல்லாமல் இவளைத் துறந்து விட்டுப்போனார் அவர் என்று சொல்லுகிறவர் ஒருவருமில்லை என்றவாறு.

1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலைய ராவ ரெனின்

என்பது இதுவுமது.

நாயகன் தான் பிரிந்து போனதற்கு நான் உடன்படும்வகை சொல்லியவர், இன்று உன் கருத்தால் நல்லநிலையினராவ ராயின், என்மேனி பட்டதுபடப் பசப்பதாக என்றவாறு.

முன் பிரிவின் கொடுமை அறியாத வென்னைப் பிரிவுக்கு உடன்படுத்தினவர் (இக் கொடுமைப் படுத்தினவர்) நன்றாயிருக்க என்பதாம்.

1190. பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்

நல்காமை துற்றா ரெனின்

என்பது*

அன்று தம் குறையைச் சொல்லிக் கூடினவருக்கு இன்று நல்காமையைச் சினேகிதர் +தூற்றாராயின், பசலையானாள் என்று பேர் பெறுகிறது எனக்கு நல்லது என்றவாறு.

அவரியல்பைப் பழித்துக் கூறாது இன்னும் பசந்தாளிவள்


*இங்குப் பரிமேலழகர் தந்த குறிப்பு இல்லை. +என்றது தோழியை