பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



486

திருக்குறள்

என்று என் மீது குறை கூறின் அதுயான் பிரிவுத் துய ராற்றும் வழி என்பதாம்.

ஆக அதிகாரம் ளக ௯க்குறள் சநள௯௰

இப்பால் 20. தனிப்படர்மிகுதி

என்பது, நாயகன் தனியேயிருந்து வருந்துகின்றதின்றி நாயகிதான் தனியேயிருந்து வருந்துகின்றதைச் சொல்லுகின்றதாம்.

1191. தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி


என்பது, “நாயகன் உன்னிலும் பொறாராய்க் கடுகவருவர். நீயும் அவரோடு பேரின்ப மனுபவிப்பாய்” என்ற தோழிக்குச் சொல்லியது:

தம்மால் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் காமநுகர்ச்சி என்னும் பரலில்லாத பழத்தினைப் பெற்றார் என்றவாறு.

இப்பரலில்லாத பழம் யாம் பெற்றிலேம் என்பதாயிற்று.

1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வா ரளிக்கு மளி

என்பது, இதுவுமது அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால் தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி[1] காலபக்குவம் அறிந்து மழை பெய்தாற் போலும் என்றவாறு.

காலபக்குவத்துக்கு மழையில்லாவிட்டால், அந்த மழையாலே பிழைக்கிறவர்கள் இறந்து போவது போலச் சொன்ன


  1. தலையளி - சிறந்த அன்பு