பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

487

பிரமாணத்திற்கு நாயகன் வாராமற் போனால் நாமும் பிராணனை விடுவோம் என்பதாம்.

1193. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுந மென்னுஞ் செருக்கு

என்பது இதுவுமது

தம்முடைய நாயகனாலே வாஞ்சிக்கப்பட்ட ஸ்திரீகளுக்கு நம்பிக்கை சொல்லி, நாயகன் பிரிந்தால், நம்மை நினைந்து கடுக வருவார்; அவர் வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று சந்தோஷம் இருக்கும் என்றவாறு.

அவர் வராவிட்டால் இறந்துவிடுவேன் என்பதாம்.

1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅ ரெனின்

என்பது*

ற்புடைய மகளிரால் நன்கு மதிக்கப் படுவாரும் தம்முடைய கணவரால் விரும்பப்படாவிட்டால், அது அவர் தீவினைப் பயன் என்றவாறு.

தீவினையுடைய எனக்கு அந்நன்கு மதிப்பால் பலனில்லை என்பதாம்.

1195. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்யவோ

தாங்காதல் கொள்ளாக் கடை

என்பது*

நம்மாலே காதல் கொள்ளப்பட்டார் தாமும் நம்கண் காதல் கொள்ளாவிட்டால், அவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர் என்றவாறு.

அவர் காதல் கொள்ளாவிட்டால் நாம் காதல் கொண்டது


*இங்குப் பரிமேலழகர் தந்த குறிப்பில்லை *இங்கும் பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு இல்லை; ஆனால் அடுத்துவரும் இருகுறள்களுக்கும் “இதுவுமது” என்றுள்ளது! (குறிப்புரைகாண்க)