பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சில ஐயங்களைப் போக்கியதுடன் தி. நகர் போக் சாலையிலுள்ள ஜைன இளைஞர் சங்கத்தினரிடம் ஆற்றுப்படுத்தினார். ஆகவே உயர்திரு S. ஶ்ரீபால் அவர்கட்கும் ஜைந இளைஞர் சங்கத்தவர்களுக்கும் என் நன்றி.

திருக்குறளை எழுதியவர் ஆசாரிய ஶ்ரீகுந்தகுந்தர் என்பது ஜைனருடைய கருத்து என்பது இம் முன்னுரை தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. தென் ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் பொன்னூர் மலை என்றொரு மலையுள்ளது. அம்மலையின் உச்சியில் ஶ்ரீ குந்த குந்தருடைய திருப்பாதங்கள் அமைத்துப் பூசிக்கப்படுகின்றன. அவ்வூரில் ஆசாரியர் குந்த குந்தர் தத்துவப் படிப்பு மையம் நடை பெறுகிறது. ஜைநச் சமயத் தொடர்பான பல தொண்டுகள் அங்கு நடைபெறுகின்றன. அவற்றை முன்னின்று நடத்தும் அன்பர் புலவர் சிவ. ஆதிநாதன் என்பவர் ஆவர். இவ்வன்பர் எனக்கு இப்பணியில் ஊக்கம் அளித்தமையோடு ஜைந சமயத் தத்துவங்களை அறிந்து கொள்வதற்குப் பல நூல்கள அளித்தும், பலரிடத்து ஆற்றுப்படுத்தியும், பல ஐயங்களைத் தீர்த்தும் எனக்கு உதவி புரிந்தருளினார் அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றி.

முச்சக நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதனடி தொழும் ஆன்றோர் வாழியர்!

திருப்பனந்தாள் கே. எம். வேங்கடராமையா 15-6-1989 முன்னாள் முதல்வர் - செந்தமிழ்க்

                                 கல்லூரி, திருப்பனந்தாள்:
                              முன்னாள் பேராசிரியர், அரிய 
                              கையெழுத்துச் சுவடித்துறை,
                              தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்