பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



488

திருக்குறள்

துக்கமே யாம் என்பதாம்.

1196. ஒருதலையா னின்னாது காமம்காப் போல

விருதலை யானு மினிது

என்பது இதுவுமது

ஸ்திரீகள் புருஷர்கள் என்னு மிரண்டிடத்திலேயும் ஆசை யுண்டாயிருந்தால், அது நல்லது: ஒருவரிடத்திலே உண்டாய் ஒருவரிடத்திலே ஆசையில்லாவிட்டால், அது நன்றாகாது: இருவரும் ஒத்ததே இன்பமாம் என்றவாறு.

1197. பருவரலும் பைதலுங் காணான்கொல் காமன்

ஒருவர்க ணின்றொழுகு வான்

என்பது இதுவுமது.

காமம் அனுபவித்தற்குரிய ஸ்திரீ புருஷர்கள் இரண்டு பேரிடத்திலும் சரியாய் நில்லாமல், ஒருவரிடத்திலே நின்று பொருகின்ற மன்மதன், அவ்விடத்தில் உண்டான பசலையையும் தனிமையையும் காணானோ என்றவாறு.

எல்லாரிடத்திலேயும் நடக்கிற தெல்லாம் அறிகிற மன்மதனும் என்னிடத்திலே வேறானான்: இனியான் பிழைக்கிற விதம் எப்படி என்பதாம்.

1198. வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து

வாழ்வாரின் வன்கணா ரில்

என்பது, தலைமகன் துாதுவரக் காணாமல் சொல்லியது:

தம்மால் விரும்பப்பட்ட காதலரிடத்து நின்றும் ஒரு நல்ல வார்த்தை வாராமலே பிரிவாற்றி உயிர்வாழ்கிற ஸ்திரீகளைப் போல் கெட்டி மனசுடையவர்கள் இந்த உலகத்தில்லை என்றவாறு.

1199. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்

டிசையு மினிய செவிக்கு

என்பது (இதுவுமது)