பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



490

திருக்குறள்

மகிழ்ச்சியைச் செய்தலால். குடித்தாலல்லாமல் மகிழ்ச்சியைச் செய்யாத கள்ளினுங் காமம் இன்பமுடையது என்றவாறு.

1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில்

என்பது, இதுவுமது.

தனக்குப் பிரியமானவரைப் பிரிந்த போது அவர்களை நினைத்தால் அந்த நினைவினாலே வருந் துக்கமில்லையாம்; ஆனபடியினாலே காமம் எப்படியும் நல்லதாம் என்றவாறு.

1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்

என்பது, தலைமகனை நினைக்கின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது :

எனக்குத் தும்மல் எழுவது போலிருந்து கெடா நின்றது; அதனாலே காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும் என்றவாறு.

1204. யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்

தோஒ வுளரே யவர்

என்பது (இதுவுமது)

எம்முடைய நெஞ்சிலே அவர் எப்பொழுதும் இரா நின்றார்; அவர் நெஞ்சிலும் யாமும் இராமோ என்றவாறு

1205. தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்க்கொ

லெந்நெஞ்சத் தோவா வரல்

என்பது (இதுவுமது)

தம்முடைய நெஞ்சிலே யாம் போக வொட்டாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர் தாம், எம்முடைய நெஞ்சிலே எப்பொழுதும் வருதற்கு நாணாரோ என்றவாறு