பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

495

ஒருகாலும் என்னைவிட்டுப் பிரியாதாரை நீ பொல்லாங்கு சொல்ல வேண்டா என்பதாம்.

1219. நனவினா னல்காரை நோவர் கனவினாற்

காதலர்க் காணா தவர்

என்பது

தமக்கு ஒரு காதலர் இல்லாத படியினாலே அந்தக் காதலரைக் கனவினாற் கண்டறியாத ஸ்திரீகள் தாம் அறிய நினைவில் வந்து கூடாத காதலரை அன்பிலர் எனநோவர் என்றவாறு

1220. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்

காணார்கொ லிவ்வூ ரவர்

என்பது

இவ்வூரிலே இருக்கிற ஸ்திரீகள் நினைவிலே[1] நம்மை விட்டுப் போனார் என்று நம்முடைய காதலரைக் கொடுமை சொல்லா நிற்பர்; அவர் கனவின்கண் வருகிற தறியார் என்றவாறு.

கனவிலே கண்டறியாதவர்கள் நனவில் வந்தாலும் பிராணனை நிற்கப் பண்ணுகிற நாயகனைக்குறை சொல்லுவார்கள்.

ஆக அதிகாரம் ளஉஉ க்குக்குறள் சதஉளஉ௰

இப்பால் 123. பொழுதுகண்டிரங்கல்

என்பது, சாயங்காலம் வந்தது கண்டு தலைமகள் விசாரப்படுதலாம்.

1221. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது

என்பது[2]

மாலைப் பொழுதே! நீ முன்னாள்களிலே வந்த மாலையோ வென்னின் அல்லை; நாயகனைப் புணர்ந்து பிரிந்திருக்கிறவர்கள் உயிரைக் கொண்டுபோகிற கடைசிக்காலமாய் இருந்தாய்


  1. நனவில் என்க
  2. இவ்வதிகாரம் 10 குறள்களுக்கும் பரிமேலழகர் தந்த குறிப்பு இவ்வுரையில் கொடுக்கப் பெறவில்லை.