பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

497

1225. காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை

என்பது

காலையும் மாலையும் அவர் கூடின நாளைப்போல் வாராமல், இப்போது வேறாய் வாரா நின்றன: யான் காலைக்குச் செய்த உபகாரம் என்ன? மாலைக்குச் செய்த பகையென்ன என்றவாறு.

காலைப்பொழுது விரகவேதனை செய்யாதிருக்க, மாலைப் பொழுது வருத்தஞ் செய்கிறபடியினாலே பகையா மென்பதாம்

1226. மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத

காலை யறிந்த திலேன்

என்பது

முன்பெல்லாம் நட்பாய் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலைப் பொழுது, இப்போது பகையாய்த் துன்பஞ் செய்கிறதை, நாயகன் பிரிதற்கு முன்னே யறியேன் என்றவாறு.

அறிந்தால், காதலரைப் பிரிந்து போகவொட்டேன் என்பதாம்.

1227. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய்

என்பது

இந்தக் காமநோயாகிய பூ, காலைப் பொழுதிலே அரும்பிப் பகலெல்லாம் பெரிய அரும்பாகி முதிர்ந்து, மாலைப்பொழுதிலே மலரா நிற்கும் என்றவாறு.

1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி யாயன்

குழல்போலுங் கொல்லும் படை

என்பது

முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இது பொழுது, நெருப்புப் போலச் சுடுவதாய மாலைப்பொழுதின்