பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

499

என்பது. பிரிவாற்றாமல் அழகழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது :

இந்த ஆற்றாமை நம்மிடத்திலேயே நிற்கத் தூரத்தில் போன காதலரை நீ நினைந்து அழுகிறதினாலே, நின் கண்கள் பிரகாசம் அழிந்து[1] முன்னே தமக்கு நாணின மலர்களுக்கு இப்பொழுது தாம் நாணா நின்றன என்றவாறு.

1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாருங் கண்

என்பது இதுவுமது

பசப் பெய்தன் மேல் நீர் வார்கின்ற நின் கண்கள், நம்மால் விரும்பப்பட்டவரது சேராமையைப் பிறருக்குச் சொல்லுவ போலா நின்றன: இனி நீ பொறுத்திருக்க வேண்டும் என்றவாறு

1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

என்பது இதுவுமது

காதலர் கூடிய நாள் இன்பமிகுதியாற் பூரித்த நின் தோள்கள் இப்போது அவர் பிரிந்து போனதை யெல்லாரு மறியச் சொல்லுகிறது போலே வாடியிரா நின்றன; இது தகாதென்றவாறு.

1234. பனைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்

என்பது இதுவுமது

அன்றும் நாயகனைப் பிரிந்த தோள்கள், அவராற் செய்யப் பட்ட அழகேயன்றிப் பழைய இயற்கை யழகையும் இழந்து வாடி வளைகள் கழன்று போகா நின்றன என்றவாறு.


  1. இழந்து (பரிமேலழகருரை)