பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

511

1269. ஒருநா ளெழுநாள் போற் செல்லுஞ்சேட் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

என்பது[1]

தேசாந்திரத்திலே பிரிந்துபோ யிருக்கிற நாயகன் திரும்பி வரும் நாளைக் குறித்து அவர் வருமளவும் பிராணனுடனே இருக்கிற ஸ்திரீகளுக்கு, ஒரு நாள் அநேக நாள்கள் போலே நெடிதாகக் காட்டும் என்றவாறு.

1270. பெறினென்னாம் பெற்றக்கா லென்னாம் உறினென்னாம்

உள்ள முடைந்துக்கக் கால்

என்பது.

நாயகி நம் பிரிவாற்றாமல் மனது நொந்து இறந்துபட்டவழி, நம்மைப் பெறக்கடவளானாலென்ன? பெற்றாலென்ன? பெறாவிட்டா லென்ன? மெய்யுறப் புணர்ந்தா லென்ன? இவை யொன்றானும் பலனில்லை என்றவாறு.

நான் சொன்ன காலத்துக்கு முன்னே போய்ச் சேர வேண்டும் என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉஎ க்குக்குறள் சநஉளஎ ௰

இப்பால் 128. குறிப்பறிவுறுத்தல்

என்பது, தலைமகன் தலைமகள் தோழி என்ற இவருள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் என்பதாம்.

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் ணுண்கண்

உரைக்க லுறுவதொன் றுண்டு

என்பது, பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினால்[2] புதுமை பாராட்டத் தலைமகள் இது ஒன்றுடைத்தென்று அஞ்சிய வழி அதனை அவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது:


  1. இங்கும் அடுத்த குறளிலும் பரிமேலழகர் தந்த இதுவுமது என்ற குறிப்புத் தரப்படவில்லை
  2. ஆசை மிகுதியால்