பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514

திருக்குறள்

வளைகள் அறிதலாவது, அவர் குறிப்பறிந்து சரீரம்வாடின படியினாலே வளைகள் கழன்று போதல்.

1278. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு

மெழுநாளே மேனி பசந்து

என்பது

நேற்றுப்பிரிந்து போனார் எம் காதலர்; யாம் பசலை கொண்டு ஏழுநாளாயிற்று என்றவாறு.

பசந்து ஏழுநாளாவது, நாயகன் குறிப்பால் பிரிந்து போகப் போகிறான் என்று முன்னேயறிந்தது.

1279. தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி

யஃதாண் டவள்செய் தது

என்பது, தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகனுக்கு அறிவித்தது.

யான் நின் பிரிவைத் தெளிவிக்கவும் தெளியாது, அவர் பிரிய யான் இங்கே யிருப்பின் இவை நில்லா எனத் தன் வளைகளையும் பார்த்து, அதற்கு ஏதுவாக வாடுமெனத் தன் தோள்களையும் பார்த்துப் பிறகு இந்த இரண்டும் நிகழாமல் நீர் நடந்து காக்க வேணும் எனத்தன் பாதங்களையும் பார்த்தாள்; அவள் இப்படிச் செய்த குறிப்பு உன்னுடன் கூட வருகிறதாயிருந்தது என்றவாறு.

1280. பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்

காமநோய் சொல்லி யிரவு

என்பது, தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக் கறிவுறுத்தது:


ஸ்திரீகள் தங்கள் காம நோயைத் தோழிகளுக்கும் வாயாற் சொல்லாமல் கண்ணினாற் சொல்லி, அது தீர்க்க வேண்டித் தோழியை வேண்டிக் கொள்ளாமல் கூடப் போக நினைந்து