பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

525

திருக்குறள்

னுங்கருத்தினால், உன்னை நினைத்தேனென்று சொன்னேன். அதுகேட்டு, ஒருகால் மறந்து ஒருகால் நினைத்திரோ வென்று சொல்லிப் பிணங்கினாள் என்றவாறு.

1317. வழுத்தினான் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ரென்று

என்பது இதுவுமது

கூடியிருக்கையிலே நான் தும்மினேன் என்று கண்டு வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தினவள் திரும்பி, ‘உம்மை யார் நினைத்தார்களோ அதனாலே தும்மினீர்’ என்று கூறிப் புலந்து அழுதாள் என்றவாறு.

1318. தும்முச் செறுப்ப வழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைத்திரோ வென்று

என்பது இதுவுமது

எனக்குத் தும்மல் வந்தது; அது கண்டு யார் நினைத்தாரென்று பிணங்கப் போகிறாளென்று, அந்தத் தும்மலைஅடக்கினேன்; அப்படி அடக்கியும் ‘உம்மை நினைத்தவளை மறைக்க வேண்டித் தும்மலை அடக்கினீர்’ என்று பிணங்கி அழுதாள் என்றவாறு.

1319. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ

ரிந்நீர ராகுதி ரென்று

என்பது இதுவுமது.

இப்படிப் பிணங்கின தன்னை வணங்கிக் கொண்டாடுகிற போதும் கோபிப்பள், மற்ற ஸ்திரீகள் பிணங்கின போது இப்படி வணங்கிக் கொண்டாடுவீர் என்று சொல்லி என்றவாறு.

1320. நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீ ரென்று

என்பது இதுவுமது