பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

527

என் வசனங்களையும் செய்கைகளையும் கண்டு தான் கோபிக்கிறதனாலே பேசாமலிருந்து, தன் அவயவங்களுடைய ஒப்பில்லாத அழகை நினைந்து அவற்றையே பார்த்தாலும், என்னைக் கோபிப்பள். ‘எந்த ஸ்திரீயை நினைந்தோ என்னை அவமதித்துப் பார்த்தீர்’ என்று சொல்லி என்றவாறு.

தான் எல்லாரினும் அதிகமான அழகு என்று பார்க்கவும், தன்னை அவமதித்துப் பார்க்கிறாரென்று பிணங்கினாள் என்பதாம்.

ஆக அதிகாரம் ளகயஉ க்குக்குறள் சந௩ளஉய

இப்பால் 133. ஊடலுவகை

என்பது. அப்படிப்பட்ட பிணக்கினாலே தமக்கு இன்பம் பிறந்தவழி, அதற்கு ஏதுவாகிய பிணக்கைத் தலைமகளும் தலைமகனும் உவத்தலாம்.

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கு மாறு

என்பது தலைமகள் காரண மின்றிப் பிணங்கினதைக் கேட்ட தோழி, “இப்படி நீ பிணங்கினது ஏன்?” என்று கேட்டவட்குத் தலைவி சொல்லியது:

நாயகனிடத்தில் தப்பில்லாவிட்டாலும் நமக்கு அவர் தலையளி[1] செய்கின்ற முறை, அவரோடு ஊடுதலை விளைக்க வாற்றாகின்றது என்றவாறு.

1321. ஊடலிற் றோன்றுஞ் சிறுதுளி நல்லளி

வாடினும் பாடு பெறும்

என்பது தலைமகள் கூற்று[2]

பிணங்குகிறது காரணமாக நம்மிடத்திலே யுண்டாகிற சிறிய துனியினாலே காதலர் செய்யும் தலையளி வாடுமானாலும் பெருமை யடையும் என்றவாறு.


  1. மிக்க அன்பு
  2. குறிப்புரை காண்க