பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

529

ஜைன உரை

இருக்கிறது இன்பமாம் என்றவாறு.

1327. ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும்

கூடலிற் காணப் படும்.

என்பது இதுவுமது.

காமம் அனுபவிக்கும் இருவருள் பிணங்குகிறதில் தோற்றவர் வென்றவராம்; அது அப்போது அறியப்படாதாயினும், புணருகிற போது அவர்களால் அறியப்படும் என்றவாறு.

1328. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலிற் றோன்றிய வுப்பு

என்பது இதுவுமது.

இப்பொழுது இவள் முகம் வெயர்க்கக் கூடிய கலவியின் கண் உண்டாய இன்பத்தைப் பிறகு அவள் பிணங்கி யாம் பெற வல்லேமோ என்றவாறு.

1329.ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா

என்பது இதுவுமது.

நல்ல இழையினை யுடையவள் என்னோடு இன்னும் பிணங்க வேணும்; அந்தப் பிணக்கைத் தீர்க்கிறதற்கு இந்த இராத்திரியானது வெகுகாலம் நீட்டிக்கவேண்டும் என்றவாறு.

அவள் பிணங்குகிறதற்கும் யான் வணங்கிப் பிணக்குத் தீர்த்தற்கும் பொழுது விடியாமல் இருக்கவேணு மென்பதாம்.

1330. ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

என்பது இதுவுமது.

காமம் அனுபவிக்கிறதற்கு இன்பமாவது, அதற்குரியவர் ஆராமையாலே பிணங்கி யிருக்கிறதாம் அளவறிந்து பிணக்கு நீங்கித் தம்முட்கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம் அப்