பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

திருக்குறள்

நடந்ததை “மலர்மிசை நடந்தோன் மலரடி யல்ல தென்—றலைமிசையுச்சி தானணிப் பொறாது” என்னும் சிலப்பதிகாரம் நாடு காண்காதை 204—205 வரிகளாலும், “விரிபூந்தாமரை மேற்சென்ற திருவாரடி யேத்தி” என்னும் சீவகசிந்தாமணி 2814 ஆம் செய்யுளடியாலும் அறியலாம்.

4. வேண்டுதல் (பக்கம் 90)

விருப்பு வெறுப்பு இல்லாத அருகக்கடவுள் பாதத்தைச் சேர்ந்தவர்க்கு எக்காலத்திலும் பிறவித்துன்பங்கள் உண்டாவனவல்ல.

5. இருள்சேர் (பக்கம் 84)

அருகக்கடவுளது (நான்கு வேதங்களின்) மெய்ம்மையைச் சேர்ந்த கீர்த்தியை தியானம் செய்பவரிடத்து மித்தியாத்வ மென்னும் மயக்கத் தாலுண்டாகிற நல்வினை தீவினை யிரண்டும் உண்டாக மாட்டா. மித்யாத்வம் என்பது பொய்யை மெய்யென்று நம்புவது. (நான்கு வேதங்கள்: 1. பிரதமாநுயோகம்: 2. காணாநுயோகம், 3. சரணாநுயோகம், 4. திரவ்யாநுயோகம்)

6. பொறிவாயில் (பக்கம் 92-99)

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் பஞ்சேந்திரியங்களையும் அவித்த அருகக்கடவுளது மெய்யான ஒழுக்கவழியிலே நின்றவர் நீடுழிவாழ்வர்.

ஐந்தவித்தானது மெய்யான ஒழுக்க வழியாவது, பகவான் நின்ற தவத்தின் மார்க்கம்.

ஆதிபகவான் பஞ்சேந்திரியங்களையும் அவித்து மகாதபசைத் தாங்கிப் ப்ரதிமாயோகத்தில் நின்றார். (ப்ரதிமா யோகமாவது பிரதிமை போல அசைவற்றிருந்து தவம் செய்தல்) இன்னும் பகவான் ஐந்தவித்தான் என்பது, “ஐவரை வென்றோன் அடி யினையல்லது, கைவதைக் காணினும் காணாவென்கண்” என்ற சிலப்பதிகாரம் நாடுகாண் காதை 198 ஆம் வரியாலும்,