பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

533

“பொறிவாயிலைந்தவித்த புனிதனீயே” என்னும் ஜீவஸம்போதனை 1 ஆவது அத்தியாயம் 29 ஆம் செய்யுளடியாலும் உணரப்படும்.

7. தனக்குவமை (பக்கம் 100-115)

தனக்கு ஒருவிதத்திலும் நிகரில்லாத (சமவசரண சாம்பிராஜ்ய)விபூதியை யுடைய அருகக் கடவுள் பாதகமலங்களைச் சேர்ந்தவர்க்கல்லது, மற்றையவர்க்கு மனக்கவலை நீக்கமுடியாது.

8. அறவாழி (பக்கம் 115)

தர்மசக்கரத்தையுடைய அருகக் கடவுளது பாதத்தை அடைந்தவர்க்கல்லாமல் சதுர்க்கதிப் ப்ரமாணமாகிய பிறவிக்கடலைக் கடத்தல் (மற்றவர்க்கு) முடியாது. சதுர்க்கதிகளாவன, நரக விலங்கு மனுஷ்ய தேவகதிகளாம்.

9. கோளில் பொறியில் (பக்கம் 125)

பஞ்சேந்திரிய வுணர்ச்சியில்லாத பொறிகளையுடைய பிரதிமை போல, எண் வகைப்பட்ட குணங்களையுடைய அருகக் கடவுளது பாதகமலங்களை வணங்காத தலையும் துதியாத நாவும் பிரயோஜன மில்லை.

பண்ணவன் எண்குணன் பாத்த்தில் பழம் பொருள் சிலப்பதிகாரம் நாடுகாண் காதை 183 ஆம் வரி

பொது

ஜைந சமயத்தில் கடவுள் வணக்கமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது. சீவகசிந்தாமணி 382 ஆம் பாடலில், “நல்லறத்திறைவனாகி நால்வகைச் சரணம் எய்தி” என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் நால்வகைச் சரணம் ஆவன: அருகசரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம் என்பர். இந்நான்கு வணக்கங்களையும் திருக்குறளாசிரியர் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். ஏழுசெய்யுட்களில் அருகசரணமும், “கோளில் பொறியில்” என்ற குறளில் சித்த சரணமும், “பொறிவாயில்” என்ற குறளில் சாது சரணமும்,