பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

535

21. ஒழுக்கத்து (பக்கம் 150)

ஒழுக்கத்து - (திரயோதச சாரித்திரமாகிய) சிலாசாரத்தினால், நீத்தார் - முற்றுந் துறந்தவர், வேண்டும் - விரும்புகிற, விழுப்பத்து பரிசுத்தமாகிய தசதர்மமே, பெருமை - அவர்க்குப் பெருமையாகும்; (இது) பனுவல் - நூற்களினது, துணிவு - துணிபாம்; திரயோதசசாரித் திரமாவது, பஞ்ச மகாவிரதம்* பஞ்சஸமிதி திரிகுப்தி ஆகிய பதின்மூன்றுமாம். பஞ்ச சமிதி: ஈர்யா ஸமிதி, பாஷாஸமிதி , ஏஷணா ஸமிதி, ஆரான நிக்ஷேபணா ஸமிதி, வ்யுத் ஸர்க்க ஸமிதி என ஐந்தாகும். திரிகுப்தி: காயத்தின் அடக்கம், வாக்கின் அடக்கம், மனோ வடக்கம்

தசதர்மம்-உத்தமக்ஷமை, உத்தமமார்த்தவம், உத்தம ஆர்ஜ்ஜவம், உத்தம சத்தியம், உத்தமசெளசம், உத்தமஸம்யமம், உத்தம தவம், உத்தமதியாகம், உத்தம ஆசிஞ்சின்யம், உத்தம பிரம்மசரியம் என.

23 இருமைவகை (பக்கம் 141)

சம்ஸாரம் மோக்ஷமென்னும் இரண்டினது துன்பவின்பங்களின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து இப்பிறப்பின் கண் மோக்ஷமார்க் கானுஷ்டானமாகிய துறவறத்தைத் தரித்தவரது மகிமையே உலகத்தில் உயர்ந்தது. சம்ஸாரம் என்பது ஜீவன்கள் சுகதுக்கங்களோடு கூடி சதுர்க்கதியில் சுழலுந் தண்மை மோக்ஷம் என்பது கர்மத்தின் கொடுமையால் ஜீவன்கள் நித்தியானந்த சுகத்தில் நிலைத்திருக்கும் தன்மை.

25 ஐந்தவித்தானாற்றல் (பக்கம் 193 - ) (புலன்களிற் செல்லுகின்ற) ஐந்தாசைகளையும் ஒழித்துக் காதி கர்மாதிகளை வென்ற மகா முனிவரது (கேவல) ஞான வன்மைக்கு அகன்ற பொன்னுலகத்துள்ள தேவர்க்குத் தலைவனாகிய தேவேந்திரனே போதுமான சாக்ஷியாம்.


* விளக்கம் மேற்படி நூல் பக்கம் 151-154 காண்க) (அச்சுநூல் பக்கம் 16-17 காண்க)