பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



536

திருக்குறள்

முனிவர்க்குக் கேவல ஞானம் உண்டான அளவில் இந்திராதி தேவர்கள் கேவல பூஜை செய்வார்களாதலால், அதனை விளக்குதற்கு இந்திரனே சாலுங்கரி என்றார். இங்ஙனம் கேவல பூசை செய்யப்படுதல் திரு நூற்றந்தாதி 11 ஆம் செய்யுளால் உணரப்படும்.

27. சுவையொளி (பக்கம் 173 - 192)

சுவை-ரசமும், ஒளி-(பார்வை பிரகாசமும், ஊறு-ஸ்பரிஸமும் ஒசை-சத்தமும், நாற்றம்-கந்தமும், என்றும்-என்று சொல்லப்பட்ட ஐந்தின் - (ஐம்புலனுக்கும் பிரதானமாகிய மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும்) (வர்ண ரஸ கந்தஸ்பரிஸங்களுடன் கூடிய) புத்கலத்தினது, வகை-கூறுபாடுகளை, தெரிவான்கட்டே–ஆராய்ந்தறியும் ஞானியினிடத்தே, உலகு-உலகத்தினது தத்துவம் விளங்கும்.

புத்கலமென்பது அணுத்திரள், அணுவும் வர்ண ரஸ் கந்த ஸ்பரி சங்களுடையது, சத்தமென்பது புத்கலஸ்கந்தங்களில் உண்டாகாநின்றது. புத்கலத்தின் கூறுபாடாவது ஸ்தூலஸ்தூலம் ஸ்தூலம், ஸ்தூலஸுக்ஷமம் என ஆறுவித ஸ்கந்தங்களாம். ‘தெரிவான் கட்டே, என்றதனால் ஜீவ புத்கல சம்பந்தமுள்ள புருடனைக் குறித்துக் காண்பித்தலால் அவன் தெரிதற்குக் காரணமாகிய ஜீவபுத்கலங்கள் செல்லல் நிற்றல் இவ்விரண்டிற்கும் ஏதுவாகிய தர்மாதர்மமும், செல்லல் நிற்றல் இவைகட்கு இடந்தரும் ஆகாயமும், ஜீவபுத்கலங்கள் உற்பத்திஸ்திதிவினாசம் இவைகளைக் குறிக்கும் காலமும், ஆகியவைகள் நிறைந்தது உலகமாம் என்பதும், இவ்வித ஜீவ புத்கலதர்ம அதர்ம ஆகாய காலாம் ஆகிய தத்துவங்களை அறியும் ஞானியினிடத்தே உலகம் அடங்கி யிருக்கிறது’ என்பது பொருளாம்.

குறிப்பு: ஜைந சமய வேதம் ஜீவபுத்கலமுதலான ஷட்திரவியங்கள் நிறைந்தது லோகமென்றும், லோகமானது ஒருவரால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல வென்றும் அநாதியாகவுள்ள தென்றும் துணிவாய்க் கூறுகின்றது (பக்கம் 19 2)