பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

திருக்குறள்

(அங்ஙனம் கொண்டு) அப்பற்றை - அதன் சம்பந்தமாகிய உபாயத்தை பற்றுவிடற்கு-கர்மபந்தம் விடுகிறதற்கு, பற்றுக - மேற் கொண்டொழுக.

இதன் கருத்து: பற்றற்றான் சொல்லிய இரத்னத்திரயங்களால்* பெறும். முத்தி வழியைப் பற்றக் கடவர் என்பதாம்.

358 பிறப்பென்னும் (பக் உ௯)

பிறப்பிற்குக் காரண மென்னும் ஞானாவரணாதிகர்மங்கள் கெட்டொழிய மோக்ஷத்திற்குக் காரண மென்கிற பரஞ்சோதி சொரூபமாகிய தனது சுத்தாத் மனை திரிலோகத்தையும் திரிகால உணர்ச்சியையும் காணவல்லது (கேவல) ஞானமாகும்.

377 வகுத்தான் (பக் உ)

வகுத்தான் - (கர்மங்களை வகுத்தருளியவனாகிய அருகக் கடவுள், வகுத்த - (ஞானாவரணிய அஷ்ட கர்மங்களின் கூறுபாடுகளைப் பிரிவு செய்தருளிய, வகையல்லால் - அக்கர்மங்களின் ஏதுக்களல்லாமல், கோடி - (அனுபவிக்கப்படும் பொருள்கள்) கோடியை, தொகுத்தார்க்கும் - சேர்த்தவர்க்கும், துய்த்தல் - அநுபவித்தல், அரிது - உண்டாகாது.

423. எப்பொருள் யார் (பக்கம் 220)

எப்பொருள் - (கடவுள் சாஸ்திரம் முனிவர் தத்துவம் ஆகிய) எந்தப் பொருள்களை, யார் யார் வாய்க் கேட்பினும் - எவரெவர் வாயினால் கேட்ட போதிலும், அப்பொருள் - அப் பொருள்களுக்குள்ளே, மெய்ப்பொருள் - (மெய்க் கடவுளால் அருளிய) ஜீவாதி தத்துவங்களின் உண்மைப் பொருள்களை, காண்பது - பொய்யின்றாகக் காணவல்லது அறிவு - நன்ஞானம்.

619 தெய்வத்தான் (பக்க ௩உ)

தெய்வத்தால் - அருகக் கடவுளால், ஆகாதெனினும் (யாதொரு அபிஷ்டமும்) பெறலாகாதெனினும், முயற்சி –


  • நற்காட்சி, நன் ஞானம், நல்லொழுக்கம் பக்கம் (234)