உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற் சேர்க்கை II

குறிப்புரை

1. சருவக்கியன் - சர்வக்ஞன் - எல்லாவற்றையும் அறிபவன் “சகல லோக பதார்த்தங்களை உள்ளங்கையில் மூன்று ரேகையைப் பிரத்தியக்ஷமாகக் காண்பது போலக் கண்டு சகல ஜனங்களுக்கும் சொல்லுகிறவனா கையால் சர்வக்ஞன் என்று அருகக் கடவுள் குறிக்கப்படுவர்” (தி-ஆ. பக்கம் 111 ) -

7. சரி - உவமை. சர்வேசுவரன் - எல்லாவற்றிற்கும் மேலாயிருப்பவன்

8. தரும சக்கரத்தை முத்திரையாகவுடைய ஜினேசுவரனுடைய - என்று அச்சு நூலில் உள்ளது. பிறவாழி - பிறப்பென்னும் கடல்

9. கடையிலா அறிவு முதலிய எட்டையும்: அநந்த ஞானம், அநந்த தரிசனம், அனந்த வீரியம், அநந்த சுரம், அதிசூக்ஷ்மத்துவம், அவகஹனத்துவம், அகுருலகுத்துவம், அவ்வியாபாதத்துவம் என்பர்.

ஞானாவரணிய வினை விலகுதலால் கடையிலா வறிவும், தரிசனாவரணியம் விலகுதலால் கடையிலாக் காட்சியும், வேதனீயம் விலகுதலால் அவ்வியாமாதத்துவமும், மோகனியம் விலகுதலால் சம்யக்த்வமும் (கடையிலா இன்பமும்), ஆயுஷ்யம் விலகுதலால் அவககனத்துவமும், நாமவினை விலகுதலால் அதிசூக்குமத்துவமும், அந்தமாயம் விலகுதலால் வரம்பற்ற ஆற்றலும் கோத்திரவினை விலகுதலால் அகுருலகுத்துவமும் வெளிப்படும் - (திரவியசங்கிரகம் பக்கம் 35)

23. சங்காரம் - சம்சாரம் - ஜீவன்கள் சுகதுக்கத்தோடு கூடி சதுர்க்கதியில் சுழலும் தன்மை (தி. ஆ. பக்கம் 141)

24. உரன் என்பதற்கு அறிவு என்பர் (தி. ஆ. பக்கம் 147)

26. இதுகளை - இவற்றை: சங்கார - சம்சார