பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



544

திருக்குறள்

27. இது முதலானதுகளை - இவை முதலியவற்றை. சுகந்தம் - நறுமணம், துர்க்கந்தம் - தீ நாற்றம்

36. அனித்தியகாலம் - இறக்குங்கால். ஆயிசு - ஆயுள். நிர்ணயம் – உறுதி

62. ஓரறிவுயிர் இரண்டு - சூக்கும ஏகேந்திரியம். தூல ஏகேந்திரியம்; முதலதுகண்ணுக்குத் தோன்றாது; அடுத்தது மரம் செடிகொடி முதலியன.

ஐந்தறிவுயிர் இரண்டாவன - மனதையுடைய ஐயறிவுயிர்கள்: மனதில்லாத ஐயறிவுயிர்கள். முதலது சக்ஞிபஞ்சேந்திரிய ஜீவன்கள்; அடுத்தது அசக்ஞிபஞ்சேந்திரிய ஜீவன்கள் எனப்படும். (குறள் 354 இன் குறிப்புரை காண்க)

அதிகாரம் 8. அன்புடைமை

அச்சுநூலில் பின்வருமாறு விளக்கம் உள்ளது:

வாழ்க்கைத் துணையாகிய மனையாள் பேரிலேயும், நல்ல புதல்வரிடத்திலேயும் இதர ஜீவன்களிடத்திலேயும் தயையுண்டா யிருக்க வேண்டும்: அவர்களிடத்தில் தயையில்லாவிட்டால் இல்லற (தர்ம)ம் நன்றாய் நடவாது என்பதாம்.

73. அச்சுநூலில் பிற்கண்டவை அதிகமாகவுள்ளன: —

உயிர் உடம்போடு கூடினல்லது அன்பு பிறவாது. எலும்பு சதையுடைய பஞ்சேந்திரிய ஜீவன்களுக்கே அன்புபிறக்கும்: மற்ற இந்திரிய ஜீவன்களுக்கு அன்பு பிறவாது; அந்த அன்பினாலே தொடர்ச்சியுண்டாம்.

80. அச்சுநூல் பின்வருமாறு :—

அன்புள்ளவனே உயிருடன் இருக்கிறவன்: அஃதாவது அன்புள்ளவனே சித்தகதியில் ஜீவஸ்வரூபமுடையவன்; அன்பு இல்லாதவன் எலும்புகளைக் கூட்டித் தோலினால் போர்த்து