பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

545

வைத்த உடம்புக்கும் சரி; தோலாலே போர்த்தது பிணம் என்பதாம்.

அதிகாரம் 9 விருந்தோம்பல்

“அஃதாவது விருந்தாகவந்த அசம்பாதன்[1] விரதிகன்[2] யதி[3] என்ற மூன்று பேருக்கும் நாலுவித தானம்[4] கொடுத்து ரக்ஷித்தல் என்பதாம்”— அச்சுநூல்

அச்சுநூல் விளக்கவுரை பின்வருமாறு:

இம்மூவருள் முதலிரண்டு வகையினர் இல்லறத்தோர். இல்லறத்தோர் பதினொரு வகைப்படுவர். இவர்கள் சிராவகர் எனப்படுவர்.

1. முதனிலைச்சிராவகர் சம்யக் தரிசனம் (நற் காட்சி) அதாவது ஜிநதர்மத்தில் திடமான நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர். இவர் இல்லறத்தார்க் கென்று விதிக்கப்பட்ட விரதங்களை அனுஷ்டிக்காமலும் அனுஷ்டிக்கச் சக்தியில்லாதவராயும் இருப்பதால் அசம்யத சம்யக் திருஷ்டி என்று அழைக்கப்படுவர்.

2. இவர் நீங்கலாக மற்ற இரண்டு முதல் பதினொரு நிலை வரையிலுமுள்ள சிராவகர் நற்காட்சியோடு தத்தமக்குரிய விரதங்களை அனுஷ்டிப்பதால் விரதிகன் எனப்படுவர். இவர் சம்யதன் என்றும் கூறப்படுவர்.

3. மேற்கண்ட இருவரும் நீங்கலாக, முற்றுந்துறந்த முனி, யதி எனப்படுவர்.

4. நாலுவித தானங்கள் ஆகாரதானம் (ஆகாரம்-உணவு); ஒளஷததானம் (ஒளஷதம்-மருந்து) அபயதானம் (அடைக்கலம்): சாஸ்திரதானம் (நூல்கள்)

81. இக்குறட்குப் பின் வருமாறு அச்சு நூலில் உரை உள்ளது.

(பக்கம் 46) துறவறத்திற்குக் காரணமான இல்லறத்திலிருந்து நீதியுடன் பொருள் தேடி வாழ்கிறது. ஏனெனில் அதிதிகளை யுபசரித்துத் தானம் கொடுத்து உபகாரம் பண்ணுவதற்கு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4