பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

திருக்குறள்


82.

இக்குறட்குப் பின் வருமாறு அச்சு நூலில் உரை உள்ளது (பக்கம் 46) அதிதிகள் பாஹ்யத்தில் இருக்கச் சாவாது பிழைக்க வைக்கும் அமிர்தமாயினும் அந்த யதீசுவரர்களை விட்டுத் தான் மாத்திரம் பொசிக்கப் போகாது; அவர்களையும் கூப்பிட்டு நவ புண்ணியத்துடன் தானம் இட்டுச் சாப்பிடவேணும்.

[குறிப்பு : அதிதிகள் - விருந்தினர். பாஹ்யம் - வெளியில் -

நவபுண்ணியம் : 1. எதிர் கொண்டழைத்தல் 2. உயர்ந்த தூய இடத்தில் இருக்கச் செய்தல் 3. பாதங்களைக் கழுவுதல் 4. அர்ச்சித்தல் 5. நமஸ்கரித்தல் 6. மனம் 7. வாக்கு 8. காயம் ஆகியவை தூய்மையாக யிருத்தல் 9. தூய உணவுகொடுத்தல் (சீவகசிந்தாமணி 2828 செய்யுள் நச்சினார்க்கினியருரை மேற்கோள் காண்க)] [அச்சுநூல் பக். 47]

84.

இக்குறட்குப் பின் வருமாறு அச்சுநூலில் உரை உளது. (பக்கம் 47) சந்தோஷத்தோடு ரிஷீந்திரருக்குத் தானம் கொடுக்கும் வீட்டில் மகாலட்சுமி சந்தோஷமாக வாசம் செய்வாள். தானம் கொடுத்த புண்ணியத்தால் ஐசுவரியம் வளரும் என்பதாம்.

85.

இக்குறட்குப் பின் வருமாறு அச்சுநூலில் உரை உளது. (பக் 48) அதிதிகளுக்குப் பக்தியோடு தானம் கொடுத்து மீந்ததைச் சாப்பிடுகிறவன் நிலத்திற்கு விதைவிதைக்க வேண்டுமோ தான புண்ணியத்தால் தேவர்கள் இரத்தின மழை பொழிகிறதும் போகபூமியில் பிறக்கிறதும் முதலானவை ஆம்என்றவாறு .

101.

இக்குறட்குரிய சிறப்புரை பின் வருமாறு அச்சுநூலில் காணப்படுகிறது; (பக்கம் 54) செய்யாமல் செய்த உதவியாவது: போக பூமியா யிருந்து கர்மபூமியாய் மாறின காலத்து விவரமறியாத ஜனங்களுக்கு ஜீவனோபாயம், கல்வி, தானம் செய்கிறது முதலானவை கற்பித்தல் போல்வது.