பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

547

152.

இதற்குரிய சிறப்புரை அச்சிட்ட நூலில் பின்வருமாறுளது. (பக்கம் 68) பொறுத்தாலும் மனத்திலே நினைவிருக்கும்: ஆகையால் நினையாமல் இருப்பது நன்று.

174.

அச்சுநூல் பக்கம் 73-74: கிரியாக லாபம் (தமிழ் உரையுடன் பக்கம் 55-56 காண்க.

சம்யக் தரிசனம் உடையவர்கள் ஜிநதர்மத்தில் திடமான நம்பிக்கையும் பக்தியும் உடையவர்கள்.

சம்யக் தரிசனம் - நற்காட்சி

இருபத்தைந்து குற்றங்கள் : [1]மூவகை மூடமும், [2]எட்டு மதங்களும், [3]ஆறு அவிநயமும், [4]ஐயம் முதலிய எட்டுத் தோஷங்களுமாம்.

[5]மூவகை மூடமாவன : உலகமூடம், தேவமூடம், பாசண்டி மூடம் என்பன.

உலக முடம் ஆவது, கடல் ஆறு முதலியவைகளில் நீராடுவதனால் புண்ணியம் பெறலாம் என்பதும், வேள்வியில் ஆடு முதலியன பலியிடுதல் முதலியன.

தேவமூடம் ஆவது, கடவுள் தன்மையற்ற சிறு தெய்வங்களை வணங்குதல், தேவதைகள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிப் பிரார்த்தனை செய்தல் முதலியன.

பாசண்டி மூடம் ஆவது பஞ்சாக்கினி மத்தியில் நின்று தவம் செய்பவர் முதலாகிய பாஷண்டிகளிடம் இருந்து மயங்கி விரும்புதல் முதலியன.

[6]எட்டு மதங்கள் ஆவன: பிறப்பு, குலம், வல்லமை, செல்வம், சிறப்பு, வடிவழகு, தவம், அறிவு இவற்றால் பெருமை கொள்ளுதல்

[7]ஆறுஅவிநயம் ஆவன: அச்சம், ஆசை, உலோபம், அன்புடைமை, மிச்சை (மித்யா - பொய்), பாசண்டிகள் நூல்,

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 1
  6. 2
  7. 3