பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548

திருக்குறள்

தெய்வம் மெச்சி வணங்கல்

ஐயம் முதலிய எட்டு தோஷங்கள் ஆவன, ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கமின்மை, செய்பழி நீக்கல், திரிந்தாரை நிறுத்தல், அன்புடைமை, அறிவிளக்கஞ் செய்தல் என்னும் எண்வகைக் குணங்கட்கு மாறான ஐயம், அவா, உவர்ப்பு, மயக்கம் முதலிய எட்டு.
218.
இடனில் பருவம் - தகுதியில்லாத காலம்;(செல்வம் சுருங்கிய காலம் என்பர் பரிமேலழகர்.)
222.
நல்லார் என்று பாடங் கொண்டவர் பரிதியார், (திருக்குறள்-உரைக் கொத்து அறத்துப்பால் - 1969 ஶ்ரீ காசிமடம் திருப்பனந்தாள் - பக்கம் 199). அதற்கேற்றவுரை அச்சு நூல் பக்கம் 86 இல் கொடுக்கப்பட்டது பின் வருமாறு:—

முனி ஏற்கிறதான வீடு கணிகை விபசாரி முதலியோர், இப்பொழுது நல்ல ஒழுக்கமாக நடந்தாலும் அவர்களிடம் தானம் வாங்குகிறது தீது கொடுக்கிறது மேலுலகத்துக்கு நல்லநெறி யில்லை என்று சொல்லுவார்கள் உண்டானாலும் கொடுக்கிறதே நல்லது. மற்ற தருமங்கள் எல்லாவற்றிலும் கொடுக்கிறதே நல்ல தருமம்.

232. அச்சுநூலிற் கண்ட உரை பின்வருமாறு: (பக்க 90)

உலகத்தார் புராணத்துக் கீர்த்தியாகச் சொல்லுகிற தெல்லாம் அதிதிகளுக்குத் தானம் கொடுத்துத் தான்தேடிய பொருளைப் புத்திரனுக்குக் கொடுத்துத் துறந்து போகி யதியாகின்றதே; அதுவேபெருமை: அந்தப் புகழே நிலையானது.

233. அச்சுநூலிற் கண்டஉரை: (பக்கம் 90)

பெரிதான உலகத்துப் பிரகாசமான புகழுடம்புபோல ஒரு பொருளும் நிலைத்திராது.

234. அச்சுநூலிற் கண்ட உரை: (பக்கம் 90) பூமியெல்லையிலே தன்னுடைய கீர்த்தியே அதிகம் என்று